இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ்  செயல்பட்டு வரும் அனைத்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தின் மூலம் தினந்தோறும் மதியம் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

 
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நோயாளிகளின் நலனை கவனத்தில் கொண்டு, தினந்தோறும் மதியம் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்தை, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு, பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. 
 
இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமன், திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் உணவு பொட்டலங்களை வழங்கினர். அரசின் இந்த உத்தரவை பொதுமக்களும், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
3
1
0
0
0
0