தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமத்தில் இன்று (15.09.2023) உலக சாதனைக்கான CPR விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 


அன்னை கல்லூரியின் இயக்குனர் முனைவர் பி.மணி வரவேற்புரை ஆற்றினார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.அன்பழகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் சுகாதார துணை இயக்குனர் B.கலைவாணி, கோவிலாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜெ.சுதாகர், அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் M.அன்வர் கபீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் 5000 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னை கல்வி குழும மாணவ, மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற்றனர். 

41
0
0
0
0
0