இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம், தஞ்சாவூர் மண்டலம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என் மண் என் தேசம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.தஞ்சாவூர் மண்டல மத்திய அரசின் மக்கள் தொடர்புக்கான அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை அறிவித்துள்ள சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்தும்,என் மண் என் தேசம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக உதவியாளர் ரவிந்திரன் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை  ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரணி சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பேசினார். வட்டார தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளர் ஜெயமணி பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா இயக்கம் குறித்து பேசினார்.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் தொழுநோய் துறையின் சார்பாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நெகிழி பைகளை தவிர்க்கும் பொருட்டு துணி பைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்கள் சார்பில் சுதா நன்றி கூறினார்.
0
0
0
0
0
0