தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றோடு நிறைவடைகிறது.
இதுவரை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவிர மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலைக்கு பிறகு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் வரும் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணியோடு நிறைவுபெற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக பிரவீன் சக்கரவர்த்தி தேர்வானதாக அறிவிக்கப்படுவார்.
