தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டனர். குறிப்பாக காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரதாததால் விதைத்த நெல் மணிகள் கருகியும், முளைப்புத் தன்மையும் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இருந்தும் மனம் தளராத விவசாயிகள் இயற்கையின் மீதான நம்பிக்கையில்  ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்ற முது மக்களின் சொல்லாடலுக்கு ஏற்ப தற்போது குறுவை நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆடி 18 தினத்தை முன்னிட்டு விவசாயிகள் தங்களுடைய வயல்களில் வழிப்பட்டு நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது நடவுப் பணிகளில் ஈடுப்படும் பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர். ஒரு பெண் ராகம் இழுத்து பாட அதை மற்றப் பெண்கள் கோரஸாக வாங்கி உற்சாகமாக பாடி மகிழ்ந்தனர். எத்தனையோ மேற்கத்திய இசை, பாடல்கள் இணையத்தில் வலம் வந்தாலும் இது போன்ற மண் மணம் மாறாத வெள்ளந்தி மக்களின் குரலில் ஒலிக்கும் தெம்மாங்கு பாடல்கள்தான் மண்ணையும், மனங்களையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது என்பது மிகையாகாது.
0
0
0
0
0
0