விப்ரோ மென்பொருள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய புதிதாக பணிக்குச் சேர்ந்த 452 ஊழியர்களை திறமை பகுப்பாய்வு அடிப்படையில் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து விப்ரோ செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்: எங்கள் நிறுவனத்தில் புதிதாக ஏராளமான இளைஞர்களை பணிக்கு அமர்த்தினோம். அவர்களின் திறமையை ஆய்வு செய்தோம். அதில் 452 ப்ரெஷ்சர்ஸ் செயல்பாடு உரிய பயிற்சி காலத்திற்கு பிறகும் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை உயர்ந்த தரத்திலான திறமையான ஊழியர்களை வேலைக்கு வைக்கவே விரும்புகிறோம்.

அதனால்தான் விப்ரோ நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்கள் ஆரம்ப நிலையில்கூட திறமையானவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிரோம். 

புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்களின் திறன், திறமை பகுப்பாய்வு செயல்முறை நடந்தது. இதில், 452 ஊழியர்கள் பயிற்சிக்குப்பின்பும் அவர்களின் வேலைத்திறன் மோசமாக இருந்தது. இந்த விரிவான செயல்திறன் மதிப்பீட்டு செயல்முறை வழிகாட்டுதல் மற்றும் மறுபயிற்சி மற்றும் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் நீக்கம் போன்ற செயல்களைத் தூண்டுகிறது. அந்த வகையில் 452 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
0
0
0
0
0
0