தமிழக அரசு மின் கட்டணம், சொத்துவரி, பால் விலையை உயர்த்தியதை கண்டித்தும், விலைவாசி உயர்வை உடனடியாக திரும்பபெற வழியுறுத்தியும், கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் டி.கண்ணகி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட நிர்வாகிகள் எம்.ராஜலஷ்மி, க.கண்ணகி, கே.ராஜேஸ்வரி, ஜெ.வாசுகி, விஜி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வை திரும்பபெற கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
0
0
0
0
0
0