தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலில் ஆய்வாளர் சுதா ராமமூர்த்தி முன்னிலையில் அலுவலக பணியாளர்கள், அர்ச்சகர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு தீயணைப்பு மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில் கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பருவமழை மற்றும் தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் தீ விபத்து, சாலை விபத்து, மழை வெள்ளத்தினால் ஏற்படும் விபத்து உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது நீரில் மூழ்கியவரை எப்படி காப்பாற்றுவது. எதிர்பாரதவிதமாக ஏற்படும் தீயை எப்படி அணைப்பது என்பது பற்றி செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

0
0
0
0
0
0