தஞ்சாவூர் ரயிலடியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை ஆட்சியர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதில் செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு குடும்ப நலம் சார்ந்த கையேடுகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர் அவர் துணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் தொழுநோய் அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் கலைவாணி, குடும்ப நலம் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குனர் மலர்விழி, வட்டார விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0