மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் அறிவுறுத்தலின்படி திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமண விழா நடந்தது.

இந்நிகழ்வில் 2 ஜோடிகளுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் இலவச திருமணம் நடத்தப்பட்டது. புதுமண ஜோடிக்கு மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், முன்னாள் மயிலாடுதுறை எம்எல்ஏ சத்தியசீலன், ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், உடைகள், முகூர்த்த மாலைகள், கட்டில், பீரோ உள்ளிட்ட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன், குத்தாலம் ஆய்வர் ஹரிசங்கரன், முன்னாள் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்ளிட்ட மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
1
0