தஞ்சவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள சோழன்மாளிகையில் ஸ்ரீ சக்திமுக விநாயகர் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு இந்த இரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பாலாலய விழா நடைபெற்றது. கோவில் விழாக்குழுவினர்கள் 
P.K.குமார், ராமச்சந்திரன், தெய்வீகன் ஆகியோர் ஒருங்கினைப்பில் "கிராமப்புற திருக்கோவில்கள் திருப்பணி" நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய இரண்டு லட்சம் நிதி உதவியில் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், ஆய்வாளர் சுதா ராமமூர்த்தி, திருக்கோவில் பணியாளர்கள், சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், மற்றும் கிராம வாசிகள் கலந்து கொண்டனர்.
3
0
2
0
0
0