கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களான அஸ்வின், ராகுல் மற்றும் அருண் ஆகியோர் இணைந்து பேராசிரியர் மு.தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பூகம்பத்தின் போது உயிர்காக்கும் புதிய படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இயற்கை பேரிடரான பூகம்பம் என்பது மக்களுக்கு பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தை விளைவிக்கிறது. அதனை தடுக்கும் வகையிலும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்ட இந்த நவீன படுக்கையானது பூகம்பத்தை துல்லியமாகவும் மிக விரைவாகவும் கண்டறிந்து தானாகவே மூடிக்கொண்டு அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களின் உயிரை காக்கிறது. 

இக்கருவியானது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களின் சரியான இடத்தை தெரிவிப்பதால், பாதிக்கப்பட்டவர்களை எளிதாக பூகம்ப இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்க முடியும். இந்த புதிய கருவியை கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் ஜி.சேகர் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இக்கருவியானது மக்களின் உயிரை பாதுகாக்க மிகவும் பயன்படும் என்று கூறி கல்லூரியின் நிறுவனத் தலைவர். ஆர்.திருநாவுக்கரசு, ஆலோசகர் எஸ்.கோதண்டபாணி, முதல்வர். முனைவர் தி.பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர். கலைமணிசண்முகம், கல்விப்புலதலைவர் முனைவர். எம்.ருக்மாங்கதன், துறைத்தலைவர் (பொறுப்பு) எ.பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்  தெரிவித்துள்ளனர்.
0
0
1
0
0
0