கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய் பாலாஜி, ஜோஸ்வா ஆரோக் ஆஸ்டின், பகலவன் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் இணைந்து, பேராசிரியர்கள் சதிஷ்குமார் மற்றும் முனைவர். சுந்தர செல்வன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி Artificial Intelligence Bus-ஐ வடிவமைத்துள்ளனர். இதனை சந்திராயன் விஞ்ஞானி முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் நேரில் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். 



சமீப காலங்களில் மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரி வாகனங்களில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்த புதிய கண்டுபிடிப்பானது, ஓட்டுநரின் கண் மறைவு பிரதேசத்தை தெளிவாக காட்டும் வகையிலும், ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்படும் போது வாகனத்தை தானாக நிறுத்தும் வகையிலும் வாகனத்தின் பின் புறத்தில் இருந்து சாலையை கடக்கும்போது எதிரில் வரும் வாகனத்தால் ஏற்படும் விபத்தினை தவிர்க்கும் விதமாகவும் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 


முதல் கட்டமாக இக்கருவி கல்லூரி பேருந்தில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இப்புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாணவர்களை சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பாராட்டி கவுரவித்தார். இந்நிகழ்வில் கல்லூரி நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, தலைவர் செந்தில்குமார், ஆலோசகர், பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் முனைவர். பாலமுருகன், துணை முதல்வர்  முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். ருக்மாங்கதன் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் உடன் இருந்தனர்.
1
0
0
0
0
0