கடந்த 6ம் தேதி சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழகத்தில் சமூக பணி என்ற போர்வையில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி பேசினார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் கருத்தை வரவேற்கும் வகையில்,
கும்பகோணம் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் பயங்கரவாத அமைப்பை உலகிற்கு அடையாளம் காட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
உடனடியாக கும்பகோணம் கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது அனுமதியின்றி பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.