சென்னை: நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் சிவகார்த்தியேகன் செண்ற கார் விபத்தில் சிக்கியது. சிவகார்த்தியேகனின் கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியது. இதனால் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். தற்போது அவாது நடிப்பில் பராசக்தி படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது. படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தொடர்பான வேலைகளில் சிவகார்த்திகேயன் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை மத்திய கைலாஷ் அருகே சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் சென்ற கார் மீது சிவகார்த்திகேயன் கார் மோதியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டு கார்களின் டிரைவர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
2
1
7
0
0
0