கும்பகோணம் அன்னை கல்லூரியில் இந்திய அரசு நேருயுவகேந்திரா மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த சுமார் 500மேற்பட்ட இளைஞர்கள் இந்த மாபெரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கபாடி, வலைபந்து, கோ-கோ மற்றும் தனிநபர் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கலாம் யூத் கிளப் தலைவர் M.கணேசன் அனைவரையும் வரவேற்றார். விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு நேருயுவகேந்திரா துணை இயக்குனர் M.திருநீலகண்டன், அன்னைகல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, துணை முதல்வர் இளஞ்செழியன், ரெட் கிராஸ் துணை தலைவர் ரொசாரியோ, உடற்கல்வி இயக்குநர் முத்து, சௌந்தரராஜன் ஆகியோர் பரிசு வழங்கினார்கள். இறுதியாக அன்னை கல்லூரி பேராசிரியர் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

1
0
0
2
0
0