தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, இன்று (பிப்.,22) நடக்கிறது. அதில் கவுன்சிலர்களாக வெற்றி பெறுவோர் சேர்ந்து, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வர். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்வு, மறைமுக ஓட்டு வாயிலாக நடத்தப்பட உள்ளது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7605 பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., முன்னிலையில் உள்ளது. காலை 10 மணி நிலவரப்படி 7,605 இடங்களில் 1,012 இடங்களில் வெற்றி நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் திமுக - 624 இடங்களிலும், அதிமுக - 129 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் - 259 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
0
0
0
0
0
0