பள்ளிகள் அளவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும் அமைக்கப்படும் இந்த "அடல் டிங்கர்" ஆய்வகம், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இந்தியா முழுவதும் அறிமுகபடுத்தபட்டுள்ளது. 

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் இந்த "அடல் டிங்கரிங்" ஆய்வகமானது கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளில் முதல் முறையாக கார்த்தி வித்யாலயா பள்ளியில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. வளரும் தலைமுறையினரான, இன்றைய மாணவர்களே நாளைய எதிர்காலம் என்பதன் அடிப்படையில் இளம் விஞ்ஞானிகளை பள்ளியிலே உருவாக்கும் விதமாக கார்த்தி வித்யாலயா பள்ளியின் தாளாளர் திரு.கார்த்திகேயன், மத்திய அரசின் இந்த ஆய்வகத்தை உருவாக்கியுள்ளார். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த "அடல் டிங்கரிங்" ஆய்வகமானது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.ராமலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு.கார்த்திகேயன், கார்த்தி வித்யாலயா  பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி.பூர்ணிமா கார்த்திகேயன், பெருமாண்டி பஞ்சாயத்து தலைவர் ஆர்.கே.பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் GKM.ராஜா, கொரநாட்டு கருப்பூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பி.அபிராமி சுந்தரம், கொரநாட்டு கருப்பூர் பஞ்சாயத்து தலைவர் சுதா அம்பிகாபதி, மாவட்ட பிரதிநிதி கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பள்ளி முதல்வர் T.அம்பிகாபதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தாளாளர் திரு.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வகத்தின் முக்கியத்துவம், இவற்றால் இளம் வயதிலேயே, மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக எவ்வாறு மாறலாம், எவ்வாறு செயல்படலாம், அவர்களின் அறிவுத் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பற்றியும், இந்த ஆய்வகத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி. பூர்ணிமா கார்த்திகேயன் எடுத்து கூறி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், எங்களின் சாதிக்கும் திறனை மேன்மேலும் ஊக்க படுத்துவதற்கு  நன்றி செலுத்துவதாக பள்ளி தாளாளரிடம் கூறினார்கள். இவ்வாறான தொலைநோக்குப் பார்வை கொண்ட  ஆய்வகங்கள் மூலம், மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர். இறுதியாக பள்ளியின் முதல்வர் திரு.எம்.ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார்.

3
0
0
0
0
0