தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த, ‘காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு  தமிழக காவல்துறை டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் காவலர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் ஒன்றாக இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் காவலர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கு தமிழகம் முழுதும் முதல்வருக்கு காவல்துறை தரப்பில் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் தமிழக போக்குவரத்து துறை துணைச் செயலாளர் உதய பாஸ்கர், தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் முதல்வர் சட்டசபையில் அறிவித்த காவலர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்கு பேருந்தில் பயணம் செய்யும் காவலர்கள் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். 

முதல்வரின் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் நிதி இழப்பை ஈடு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் பயன்பெறும் காவலர்களின் விவரங்களை போக்குவரத்துத்துறை கேட்டுள்ளது. குறிப்பாக சென்னையை பொருத்தவரையில் ஏசி பேருந்தை தவற இலவசமாக மாதம் முழுவதும் அனைத்து மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கு மற்ற மாவட்டங்களை பொருத்தவரையில் விலையில்லா பயணச்சீட்டு மூலம் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் திட்டத்தின்கீழ் காவலர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெறலாம் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2
2
0
0
0
0