முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ அமைப்பு ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த துறைகளுக்கு, ‘முதல்வரின் முகவரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 'முதல்வரின் முகவரி' துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையில் மனுக்களுக்கு தீர்வு காண, ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த துறைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்புத் துறையாக பொதுத்துறை இருக்கும். இத்துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என அரசு தெரிவித்துள்ளது.

2
0
0
0
0
0