கும்பகோணம் துக்காம்பாளைய பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு கும்பகோணம் செல்வம் தியேட்டர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே பசு மாடு அமர்ந்திருப்பதை கவனிக்காத மணிகண்டன், வேகமாக மாட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளார். விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இதன் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.