இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான எம்கே கவுசிக், கொரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 66. இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் தங்கம் வென்றது. அந்த அணியில் விளையாடியவர் டெல்லியைச் சேர்ந்த எம்கே கவுசிக் (வயது 66). இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17 ம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 வாரங்களாக கொரோனா தொற்றுடன் போராடி வந்த எம்கே கவுசிக், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டதாக அவரது மகன் எஹ்சன் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்  முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் சிங்கும் லக்னோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0
0
0
0
0