இந்திய அரசின் நேரு யுவகேந்திரா (தஞ்சாவூர்) மற்றும் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் சார்பில்
மகாமகம் குளக்கரையில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை 
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார். 

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், ராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர் துரை.கார்த்திகேயன், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் NSS திட்ட அலுவலர்கள் முருகன், சுவாமிநாதன், அருள், கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்கள் சதீஷ்குமார், ஜோசப் ஆரோக்கியம், பார்த்தசாரதி மற்றும் NSS திட்ட அலுவலர்கள், நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள், இளைஞர் மன்ற பிரதிநிதிகள் ரெட்கிராஸ் சார்பில் துணைத்தலைவர் ரொசாரியோ, பெஞ்சமின், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா அமைப்பினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மேலும் மகாமக குளத்தைச் சுற்றிலும் இருந்த குப்பைகளை அகற்றினர்.

இறுதியாக விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் கணேசன், கலந்து கொண்டு சிறப்பித்த நேரு யுவகேந்திரா மன்ற உறுப்பினர்கள், தேசிய இளையோர் தொண்டர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும்  அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார்.

2
1
2
0
0
0