கும்பகோணம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், இந்துக்களின் விக்ரஹ ஆராதனையை இழிவு படுத்திய மோகன் சீ லாசரஸை கண்டித்தும், மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனை காவல்துறை அதிகாரி  தாக்கியதை கண்டித்தும், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தததை கண்டித்தும் காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது, சிலர் தூக்கிப்போடும் எலும்பு துண்டுக்கு ஆசை பட்டு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் காவல்துறையினரை கண்டிப்பதாகவும், அவரை கைது செய்வதற்கான காரணம் கேட்ட, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனை தாக்கிய காவல் அதிகாரியை கண்டித்தும் பேசினார்.

தமிழகத்தில் எந்த பகுதியில் இந்துக்களுக்கு பிரச்சனை வந்தாலும் அவர்களுக்காக பிஜேபி தான் குரல் கொடுப்பதாகவும், திமுக அதிமுகவில் இந்துக்கள் இல்லையா என்றும், அவர்களுக்கு இந்துக்கள் என்ற உணர்வுகள் இல்லையா என கேள்வி எழுப்பியதுடன், அரசியலுகாகவும் தங்கள் கட்சியின் வெற்றிக்காகவும் திமுக எதுவும் செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.



இந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் கல்கண்டு ரங்கராஜன் தலைமை தாங்கினார். நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் சந்தன கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் கும்பா வெங்கடச்சாரி, வைஜயந்திமாலா, மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவர் கண்ணன், தெற்கு ஒன்றிய தலைவர் சச்சில் சரவணன், நகர பொதுச்செயலாளர்கள் KS.சீனிவாசன், V.சீனிவாசன், செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், நீலமேகம், நகர துணைத்தலைவர், கணேசன், பசும்பொன் பாண்டியன் மற்றும் நகர மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், கட்சியின் வார்டு தலைவர்கள், கிளை தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0