கொரோனா தொற்றின் காராணமாக பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுவார்கள், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் பூட்டப்படும் என்றும் உத்தரவிட்டது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றினார்கள். ஆனால் கோவிலை பூட்டிய அரசு டாஸ்மாக் ஒயின்ஷாப் திறந்ததால், பாஜக தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ் தலைமையில் கடந்த வாரம், டாஸ்மாக் திறந்த தமிழக அரசு கோவிலை திறக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோவில் திறக்கப்பட்டது. ஆனால் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் ஆலயத்தின் பிரதான வடக்கு வாசல் கதவு திறக்கப்படவில்லை, கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

துர்க்கையம்மன் கோவில் பிரதான வடக்கு வாசல் கதவு திறக்கப்படாததால் பக்தர்களும், பட்டீஸ்வரம் பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகளும் விவரங்கள் தெரிந்து கொள்ள கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமனை தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் எந்தவொரு சரியான தகவலையும் தெரிவிக்காமல் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டுள்ளார். இதனால் அனைவரும் கோவில் வாயிலில் பிரதான வாயில் கதவை திறக்க வழியுறுத்தியும், நிர்வாக அதிகாரி முத்துராமனை கண்டித்தும்  சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், கோவில் நிர்வாக அதிகாரியிடம், இந்த பிரச்சனை குறித்து பேசுவதாக தெரிவித்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

ஆனால் காவல் கண்காணிப்பாளர் கோவில் நிர்வாக அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் கோவில் பிரதான வடக்கு வாசல் கதவு திறக்கப்படவில்லை, அதனால் பட்டீஸ்வரம் பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகள் இந்து அமைப்புகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அன்றைய இரவே பேசி, பிரதான வடக்கு வாசல் கதவை திறக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

தற்போது கோவில் வாசல் திறக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சனையை தெரிவித்த அன்றைய தினமே, முழு முயற்சி எடுத்து பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில் பிரதான வடக்கு வாசல் கதவை திறக்க நடவடிக்கை மேற்கொண்ட இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி அவர்களுக்கு, வர்த்தகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களின் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

0
0
0
0
0
0