தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அது அஜீத்தின் வலிமை தான்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் அண்மையில் முடிவடைந்துவிட்டது. ஒரு Glimpse வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்கள். அடுத்தபடியாக படத்தில் இருந்து என்ன வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, ஒரு நடிகருக்கு இப்படியொரு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நான் இதுவரை பார்க்கவில்லை என அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

அதோடு வலிமை படம் நன்றாக வந்திருப்பதாகவும், அஜித்தின் 61வது படத்தையும் தான் தயாரிக்க வினோத் இயக்க இருப்பதாகவும் கூறிய அவர் இதுவும் வலிமை படத்தை விட டபுள் மடங்கு ஆக்ஷன் படமாக இருக்கும் என்றிருக்கிறார்
4
0
1
0
0
0