திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில் பொதுமக்களுக்கு 143 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு 1000 பனை விதைகள் நடப்பட்டது. திமுக துவக்க நாளை முன்னிட்டு 25 புதிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் திமுக கிளை கழக செயலாளர் விவேகானந்தன், கருப்பையன், ஷாஜஹான், திமுக கிளை கழக பொருளாலர் கஜேந்திரன், முகம்மது ரஃபிக், ராமலிங்கம், கிளை கழக அவைத்தலைவர் ராஜேந்திரன், அபுபக்கர், மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினர் பக்கிரிசாமி, செல்வம், பாஸ்கர், ராசப்பா, சங்கர், தேமுதிக நிர்வாகி மாரிமுத்து, திக பகுத்தறிவாளர் கழக நிர்வாகி உத்தமன் காமராஜ், திமுக நிர்வாகி ஜீவானந்தம், அப்துல்லா, சாதிக் பாட்ஷா, இளைஞரணி நிர்வாகி இர்ஷாத், குருநாதன், ரவிச்சந்திரன், விஜயேந்திரன், சேகர், சுப்ரமணியன், சாமி அய்யா, செந்தில், பாக்கியராஜ், சங்கர், சிவக்குமார், திக நிர்வாகி ஜெயபால், திக ஒன்றிய அமைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
4
0
0
0
0
0