சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள், அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ம் நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். 

வாழ்க்கை என்ற பாடத்தை கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். இத்தகைய ஆசிரியர்களை பெருமை படுத்தும் விதமாக இன்று கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது. இதில் ஆசிரிய ஆசிரியைகள் தங்களின் தனித்திறமைகளையும், தற்பொழுது உள்ள காலகட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை பற்றி விழிப்புணர்வினை மௌன மொழி நாடகம் மூலமாகவும், வகுப்பில் மாணவ மாணவியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நாடகம் மூலமாகவும் வெளிப்படுத்தினர். 

கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இருபள்ளி முதல்வர்களும் சிறந்த ஆசிரியராக அனைவரும் இருக்க வேண்டும் என பாராட்டி சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பள்ளி தாளாளர்கள் சிறப்பு பரிசினை வழங்கினார்கள்.
0
0
0
0
0
0