மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுந்தர பெருமாள் கோவிலில் அவரது சிலைக்கு குடந்தை தெற்கு வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் MKR அசோக்குமார், சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜெயக்குமார், சுவாமிமலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பகவான்தாஸ் அவர்கள் மாநில சமூக வலைதள அணி செயலாளர் ஜீவா காமராஜ், கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் அசோகன், சுந்தர பெருமாள் கோவில் கமிட்டி தலைவர் கார்த்தி, இளைஞரணி தலைவர் ஆனந்தராஜ், சோழன்மாளிகை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வேலாயுதம், பாபு, தமாகா மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், மாணவர் அணி செயலாளர் திராவிடச்செல்வன், பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு கும்பகோணம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.