தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன் கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து உத்தரவிட்டார். 
கும்பகோணத்தை மாநகராட்சியாக மாற்றினால் அதனை சுற்றியுள்ள சில ஊராட்சிகள் இதில் இணைக்கப்படும். 

கும்பகோணத்தில் இணைக்கப்படவுள்ள சோழன்மாளிகை ஊராட்சி பொதுமக்கள் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வரும் நிலையில் மாநகராட்சியாக முதல்வர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பில் கருத்து தெரிவிக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில் சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெயக்குமார் தலைமையில், ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கும்பகோணம் மாநகராட்சியில் சோழன்மாளிகை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தின் நகல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திமுகவை சார்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சோழன்மாளிகையை கும்பகோணம் மாநகராட்சியில் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
6
1
1
0
0
0