வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடக்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக... 10.02.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 11.04.2021 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 12.4.2021. தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 13.4.2021 மற்றும் 14.4.2021. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) வட்டணம் (ராமநாதபுரம் மாவட்டம்) தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
0
0
0
0
1
0