கும்பகோணத்தில் சிவசேனா கட்சி சார்பில் வீரசைவ பெரிய மடத்தில் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மண்டல அமைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகளாக, நகர தலைவர் குருமூர்த்தி நகர செயலாளர் ஆனந்த் இளைஞரணி துணைத்தலைவர் பிரகாஷ் இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன் செயற்குழு உறுப்பினராக ரமேஷ் ஆகியோரும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி நகர தலைவராக குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாளை பெரம்பலூரில் நடைபெற இருக்கும் பயிற்சி முகாமில் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் பதவியேற்ற 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்களித்த திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினை உடனடியாக கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழியுறுத்தியும், மழைக்காலம் நெருங்கிவருவதால் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் சரி செய்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கிராமப்புற பகுதிகளில் மின்விளக்கு அமைக்கவும், செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகின்ற விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0
0
0
0
0
0