ஆடி வெள்ளியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அமைந்துள்ள ஜெய்சக்தி காளியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டுகளால், அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரம் காண்போரை வெகுவாக ஈர்த்தது. முன்னதாக, அதிகாலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, 12 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனை வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு குங்கும பிரசாதத்துடன் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.