கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 75வது சுதந்திர தினம் கல்லூரி நிறுவனத்தலைவர் R.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் செய்திருந்தனர்.

கல்லூரியின் நிறுவனத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த தியாகிகளின், தியாகங்களை நினைவு கூர்ந்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் மகாமக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் இருந்து அணைக்கரை வரை சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பனை மர விதை நடப்பட்டது.

தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களான கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இறுதியாக 2019 - 20 ம் கல்வி ஆண்டில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மாணவர்களை கௌரவிக்கும் பொருட்டு கல்லூரி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சுமார் 60 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புகளை கௌரவிக்கும் விதமாக Honouring Human Centered Innovations நிறுவனம் வழங்கிய பாராட்டு பத்திரமும், முதல்வருக்கான Mentor of the year விருதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி ஆலோசகர், முதல்வர், துணை முதல்வர், கல்விப்புல தலைவர் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0
0
0
0
0
0