சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் கடன் வாங்கியே நிறைவேற்றப்படுவதாக கூறினார்.

2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிந்த போதும், கடன் சுமை இருந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் அனைத்தும் பல்வேறு திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீரழிந்ததாக கூறுவது தவறானது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தேவையின்றி சிலர் வதந்தி பரப்புவதாக கூறினார். 
1
0
0
0
0
0