ஒலிம்பிக் போட்டியில், வெற்றியை தவறவிட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு, பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஹாக்கி போட்டியில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், இந்திய அணி, பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. எனினும், போட்டியில் இந்திய அணி, 3-க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி தோல்வியைத் தழுவியது.

இதனால் இந்திய அணி வீராங்கனை மிகுந்த சோகத்துக்கு உள்ளாயினர். சில வீராங்கனைகள் கண்ணீர் விட்டனர். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறிய அவர், கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள். உங்களை நினைத்து மொத்த நாடும் பெருமை கொள்கிறது. உங்கள் முயற்சியால் இந்திய ஹாக்கி அணி பல தசாப்தங்களுக்குப் பிறகு பேசப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
0
0
0
0
0
0