கும்பகோணம் பகுதியில் எந்த நேரமும் பரபரப்பாக வியாபாரம் நடைபெறும் பகுதியில் முக்கியமானது பெரிய கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியை சுற்றி ஒரு வீட்டிற்கு தேவையான அன்றாட பொருட்கள் முதல் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான நகைகள், ஜவுளிகள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி விடலாம். பூக்களுக்கான மிகப்பெரிய மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை சந்தையும் இந்த பெரிய வீதியில்தான் செயல்பட்டு வருகின்றது. 

எந்த நேரமும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நிரம்பி வழியும் இந்த பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளுக்கு வெளியில் இரும்பு பைப்புகளால் ஸ்டால்கள் அமைத்தும், சிலர் கழிவு நீர் செல்லும் சாக்கடைகளை மூடியும், நடைபாதையில் ப்ளக்ஸ் விளம்பர போர்டுகள் வைத்தும் பொதுமக்களுக்கு இடையூராகவும், வாடிக்கையாளர்கள் வாகணங்களை நிறுத்தி பொருட்கள் வாங்க முடியாமலும், வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக மிகவும் அகலமான கும்பகோணம் பெரிய வீதி நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு எந்த நேரமும் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.

இதனால் கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது நகராட்சி அதிகாரிகள் பெரிய கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்பு பற்றியும், அதனால் பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருப்பதாகவும், வியாபாரிகளும், கடை உரிமையாளர்களும் தாமாக முன் வந்து தங்கள் கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும் ஆட்டோவில் விளம்பரம் செய்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் நகராட்சி ஆணையர் நவீந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் (பொறுப்பு), சேதுராஜன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும்
காவல்துறையினர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
6
0
4
1
0
0