விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தமிழக அரசை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் வாயிலாக தமிழக முதல்வருக்கு மனு அளிக்க சென்ற போது அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா தெரிவிக்கையில்:

வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றோம், சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இறுதி கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை என்றும், வேண்டுமானால் அவரவர்கள் இல்லத்தில் வைத்து வழிபடலாம் என்றும், ஒரு அறிக்கை வெளியிட்டது. அதனால் விநாயகர் சிலை செய்த கைவினைக் கலைஞர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள சூழ்நிலையில் இதுவரை தமிழக அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவில்லை, இதனால் விநாயகர் சிலை செய்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள், இந்து அமைப்புகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்குமா நடக்காதா என்ற அச்சத்திலேயே, பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம். இதனால் தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைய தினம் தமிழக முதலமைச்சருக்கு கோட்டாட்சியர் வாயிலாக மனு அளிக்க ஊர்வலமாக சென்ற போது எங்களை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது, 

ஆனால் நேற்றைய தினம் இரவு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு  எதிர்ப்புறம் உள்ள கிறிஸ்தவ அந்தோணியர் தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வந்து தேர்பவனி நிகழ்ச்சியில் ஈடுபட்டார்கள். அப்போது காவல்துறை கைகட்டி மௌனம் காத்துக் கொண்டிருந்தது, எங்கள் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்லி இங்கேயே தடுத்திருக்கிறார்கள். இந்த மதச்சார்பற்ற நாட்டில் காவல்துறை ஒவ்வொரு மதத்திற்கு ஒரு சட்டம் போடுகிறார்கள். இந்த இடத்தில் காவல்துறையின் செயல்பாட்டைக்  கண்டித்து நாங்கள்  கோஷங்கள் எழுப்பி இருக்கிறோம். தொடர்ந்து இந்த மனுவை ஆட்சியரிடம் ஒப்படைக்க காத்திருக்கிறோம்.
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு உரிய அனுமதி அளிக்கவில்லை என்றால் தடையை மீறி விநாயகர் சிலை பொது இடத்தில் பிரதிஷ்டை செய்தும், ஊர்வலம் நடத்துவோம் என்று தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா தலைமையில், குடந்தை நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி, மாவட்ட மாணவரணி செயலாளர் சத்தியமூர்த்தி, சிவசேனா மண்டலத் தலைவர் வேல்முருகன், தெய்வத்திருமகனார் பாசறைத் தலைவர் பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
5
0
0
0
0
0