கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் எம்.முகம்மது சமீர், கே.ஜே.சூர்யா, இ.பிரவீன்குமார் மற்றும் டீ.சிவபிரியன் ஆகியோர் இணைந்து பேராசிரியர் ஆர்.வினோத் வழிகாட்டுதலின்படி பார்வையற்றோருக்கு வழிகாட்டும் புதிய கருவியை வடிவமைத்துள்ளனர்.

இன்றைய சூழலில் பார்வையற்றோர் வாழ்வில் தன்னம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. இதனை மனதில் கொண்டு பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கருவியின் மூலம் யாருடைய உதவியும் இன்றி அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் தானாக வாழ முடியும். இந்த கருவியானது நடை பாதையில் உள்ள மேடு பள்ளங்கள் மற்றும் இடையூறுகளை துல்லியமாக அவர்களுக்கு தெரிவிக்கும். 

இக்கருவியானது ஒரு வழிகாட்டி போல் அவர்கள் செல்லவிருக்கும் இடங்களை கைபேசியின் மூலம் தெரிவிக்கும். மேலும் ஆபத்தான நேரங்களில் அவர்களுடைய உறவினர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தையும் தெரிவிக்கும். இந்த நவீன கருவியானது பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. 
இந்த புதிய கருவியை ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் டெம்பிள் சிட்டியின் தலைவர் ஆர்.எம்.செந்தில் பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இக்கருவியானது பார்வையற்றோர் வாழ்வில் நல்ல தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் என்று கூறி கல்லூரியின் நிறுவன தலைவர் ஆர்.திருநாவுக்கரசு, ஆலோசகர் எஸ்.கோதண்டபாணி, முதல்வர் முனைவர். தி.பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர்.கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். எம்.ருக்மாங்கதன், துறைத்தலைவர் பொறுப்பு எஸ். சந்திரசேகரன், திட்ட ஒருங்கிணைப்பளர் எம்.தியாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
2
0
0
0
0
0