கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கட்டிடவியல் துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் A.அப்துல் சேஃப், M.தினேஷ் குமார், R.மணிமாறன் மற்றும் A.ரஞ்சித் ஆகியோர் இணைந்து துறைத்தலைவர் R.ரேவதி அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தண்ணீரை உறிஞ்சும்  கான்கிரீட்டை வடிவமைத்துள்ளனர். 

சாலைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையிலும், விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கான்கிரீட்டை கும்பகோணம் VIAN கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்கள் நிறுவனத்தின் முதன்மை கட்டிடக் கலைஞர் மற்றும் நிறுவனர் திரு.எஸ்.ஆனந்த் சதாசிவம் அவர்கள் பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இந்நிகழ்ச்சியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் முனைவர் T.பாலமுருகன், துணைமுதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். M.ருக்மாங்கதன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் M.முருகேசன், துணைமுதல்வர் G.சுதாகர், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் R.வீரவேல், செல்வி G.வாசுகி மற்றும் விரிவுரையாளர்கள் சாதனை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்  தெரிவித்துள்ளனர்.
6
0
0
0
0
0