கும்பகோணம் அடுத்த செம்பியவரம்பல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செல்வம், இவரது மனைவி கவிதா, இவர் செல்வத்திற்கு இரண்டாவது மனைவியாவார். முதல் மனைவி மல்லிகா இறந்து விட்டதாகவும், அவரை செல்வம் கொன்று விட்டதாகவும், அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கவிதாவுக்கு கவி பாரதி, செல்வபாரதி என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கவிபாரதி என்ற குழந்தையை பணத்திற்காக ஆசை பட்டு யாரிடமோ விற்று விட்டதாக தெரிகிறது. கவிதா திருமணத்திற்கு முன் பாரதி என்ற நபரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல், செல்வத்துடன் நடந்த திருமணத்திற்கு பிறகும் கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது.
செல்வம், கவிதா இருவரும் கும்பகோணம் அடுத்த செம்பியவரம்பல் மெயின் ரோட்டில் வசித்து வருகின்றனர்.
கவிதா, பாரதி இருவரும் இவர்களின் வீட்டிலேயே தவறான செய்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து தெருவாசிகள் செல்வத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் செல்வம் கவிதாவையும், தன் வீட்டிற்கு வந்து செல்லும் பாரதியையும் கண்டிக்கவில்லை என்றும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் பழக்கம் தொடர்ந்து வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கவிதாவுடன் பாரதி இருக்கும் நேரத்தில் கையும், களவுமாக ஊர்மக்கள் பிடித்து கண்டித்து, அடித்து விரட்டியுள்ளனர். இதனால் தன்னை அடித்ததாக கூறி பாரதி சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து விசாரித்த நாச்சியார்கோவில் காவல் துறையினர், பாரதியை அடித்தது தொடர்பாக சிலரை கைது செய்துள்ளனர்.
இதனால், உன் மனைவியின் கள்ளக்காதல் உனக்கு தெரிந்தே நடக்கிறதா என்றும்! இதன் பிறகு பாரதி இங்கு வந்தால் ஊர் மக்கள் ஒன்றினைந்து காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று மாலை செல்வம் தன்னுடைய வீட்டை காலி செய்து விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை எடுத்து சென்று விட்டதாக அருகிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று விடியற்காலை வீடு தீப்பற்றி எறிந்துள்ளது, மேலும் பக்கத்திலுள்ள தமிழ்மணி என்பவரின் வீடும் எறிந்து சேதமாகியுள்ளது. செல்வத்தின் வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில், தமிழ்மணி
வீட்டிலிருந்த பொருட்கள், பணம், கல்வி சான்றிதழ் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்து தமிழ்மணியின் மனைவி மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில் பாரதி, கவிதா இருவரின் கள்ளக்காதல் விவகாரம் செல்வத்திற்கு தெரியும் என்றும், சில நாட்களுக்கு முன் இருவரும் ஊர் மக்களிடம் கையும், களவுமாக சிக்கிக்கொண்டதால் அவர்கள் இந்த வீட்டை சில நாட்களுக்கு முன்பே காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டதாகவும், பாரதியை கண்டித்த சிலரின் மீது பழி சுமத்த, செல்வம் மற்றும் பாரதி இணைந்து வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம், அல்லது இவர்கள் ஆள் வைத்து வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
-
நான் கேள்விப்பட்ட மையில் இது சரியான பதிவு
-
இதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மை... காவல் துறைக்கும் டெல்டா மலருக்கும் நன்றி... இப்படிக்கு செம்பியவரம்பல் இளைஞர் அணி நற்பணி மன்றம்.... ????
-
ஜயா நன்றி
-
குழந்தைகளுக்கு செல்வபாரதி கவிபாரதி பெயர் .. கள்ள காதலன் பெயர் .பாரதி . கணவர் பெயர் செல்வம். சேர்ந்து இருக்கிறது நல்லா இருக்குப்பா....
-
குழந்தைகளுக்கு செல்வபாரதி கவிபாரதி பெயர் .. கள்ள காதலன் பெயர் .பாரதி . கணவர் பெயர் செல்வம். சேர்ந்து இருக்கிறது நல்லா இருக்குப்பா....